காஷ்மீர் பாரமுல்லா பகுதியில் தீவிரவாதி சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2019 01:54 pm
terrorist-shot-dead-in-jammu-and-kashmir-sopore

காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோப்போர்(Sopore) என்ற பகுதிக்கு அருகே தீவிரவாதிகள் நுழைந்ததாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வந்ததையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு சென்றனர். நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி யார் என்பது குறித்து இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. 

மேலும், தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close