சட்டவிரோத மணல் சுரங்க முறைகேடு: சமாஜ்வாதி தலைவரின் வீட்டில் சிபிஐ ரெய்டு!

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2019 03:52 pm
illegal-mining-case-gayatri-prajapati-s-house-among-22-places-raided-in-up

சட்டவிரோத மணல் சுரங்க முறைகேட்டில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான காயத்ரி பிரஜபதிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. 

கடந்த 2012-16 கால கட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோத மணல் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான வழக்கு, அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரகலா, சுரங்க உரிமையாளர் அடில் கான், ஜியாலஜிஸ்ட் மொய்னுதீன், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் குமார் மிஷ்ரா, அவரது சகோதரர் தினேஷ் குமார் மிஷ்ரா, ராம் அஷ்ராய் பிரஜபதி, அவதார் சிங், சஞ்சய் தீக்ஷித் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான காயத்ரி பிரஜபதிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் மொத்தம்  22 இடங்களில் சிபிஐ சோதனையானது நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close