கேரளாவில் கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2019 04:11 pm
heavy-rain-at-kerala

கேரளாவில், தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதை அடுத்து, அந்த மாநிலத்தின் கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் மழை சீசன் துவங்கிவிட்டது. தென்மேற்கு பருவமழையின் துவக்கமே மிக கனத்த மழையை தந்துள்ளது. கொச்சி, பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கொச்சியில் வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, கடந்த ஆண்டு கேரளாவில் பெய்த மிக கனத்த மழையால், மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் அது போன்ற நிலை உருவாகிவிடுமாே என, மக்களில் ஒரு தரப்பினர் அச்சம் அடைந்துள்ளனர். எனினும், பருவமழையால் வறட்சி இல்லாமல் போகும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close