‛மாஜி’ அமைச்சர் வீடு உள்ளிட்ட 22 இடங்களில் சி.பி.ஐ., ரெய்டு

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2019 05:46 pm
cbi-raid-at-22-places-that-owned-by-up-ex-minister-gayatri-prajapati

உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில், உ.பி., மாநில முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதியின் வீடு உள்ளிட்ட 22 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சாேதனை நடத்தி வருகின்றனர். 

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் காயத்ரி பிரஜாபதி. சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர், மாநில அமைச்சராக இருந்த காலத்தில், பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுரங்க முறைேகடு வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக, காயத்ரி பிரஜாபதிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் பிரஜாபதிக்கு சொந்தமான, 22 இடங்களில் இந்த  சாேதனை நடைபெறுவதால், அப்பகுதிகளில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close