புயல் முன்னெச்சரிக்கை: 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்!

  அனிதா   | Last Modified : 13 Jun, 2019 08:31 am
storm-warning-3-lakh-people-are-evacuated

வாயு புயல் இன்று கரையை கடப்பதையொட்டி, குஜராத் மாநிலத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

அரபிக்கடலில் மும்பைக்கு தென் மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர புயலாக வலுபெற்று, இன்று காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - மகுவா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், கரையை கடக்கும் போது மணிக்கு 140 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் கரையை கடக்கும் பகுதி என கணிக்கப்பட்ட போர்பந்தர், மகுவா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 3 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றபட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close