அமித் ஷா தலைமையில் பாஜக மாநிலத் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 12:15 pm
bjp-state-leaders-meeting-today-in-delhi

பாஜக தேசிய தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டம் டெல்லியில் டெல்லியில் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 சமீபத்திய மக்களவளவைத் தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பின்னர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பாஜக நாடாளுமன்ற குழுவின் தேசிய தலைவர் ஆகிய பொறுப்புகளையும் கூடுதலாக ஏற்று இருப்பதால் அவர் கட்சியின் தேசிய தலைவராக  முழுநேரமும் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் இன்று தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், அனைத்து மாநில பாஜக தலைவர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தின் சார்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர். 

இன்று நடைபெறும் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close