நிலவில் நீர் இருப்பதை சந்திரயான் - 2 உறுதி செய்யும்: மயில்சாமி அண்ணாதுரை

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 01:22 pm
mylswamy-annadurai-talks-about-chandrayaan-ii

ஜூலை மாதம் இஸ்ரோவினால் விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான் - II செப்டம்பர் 6ம் தேதி நிலவில் இறங்கி பணிகளைத் தொடங்கும் என்றும் நிலவில் நீர் இருப்பதை சந்திரயான் - II உறுதி செய்யும் என்றும் இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) நிலவிற்கு சந்திரயான் -I விண்கலத்தை கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது. அதன்பின்னர் இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திரயான் -II விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டு அதற்கான இறுதிப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் மிக முக்கியமான திட்டமான சந்திரயான்-II செயற்கைக்கோள் வரும் ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை, "சந்திரயான் -II செப்டம்பர் 6ம் தேதி நிலவில் இறங்கி பணிகளைத் தொடங்கும். நிலவில் நீர் இருப்பதை சந்திரயான் - II உறுதி செய்யும். 

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, பின்னர் விண்கலத்தை ஓடுதளத்தில் இறக்க முயற்சி செய்வோம். நிலவிற்கு மனிதனை அனுப்பும் பணிகளுக்கான முன்னோட்டமே இந்த சந்திரயான் - II திட்டம் செயல்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close