நிர்மலா மற்றும் ஜெய்சங்கருக்கு உயரிய  விருது!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 02:26 pm
federal-ministers-nirmala-sitharaman-and-s-jaishankar-to-get-jnu-s-distinguished-alumni-award

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில், நிதியமைச்சராக பதவி வகித்து வரும் நிர்மலா சீத்தாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  ஆகியோருக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உயரிய  விருது வழங்கப்பட்ட உள்ளதாத அதன் பதிவாளர் அறிவித்துள்ளார். 

மத்திய அமைச்சர்களான நிர்மலா சீத்தாராமன் தனது எம். ஏ மற்றும் எம் பில் பட்டங்களை தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துள்ளார். அதே போன்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அவரின் எம். பில் மற்றும் டாக்டர் பட்டம் ஆகியவற்றை  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து பெற்றுள்ளார்.

இந்நிலையில்  ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் தங்கள் பல்கலைக்கழகத்தின் முன்னால் மாணவர்களான நிர்மலா சீத்தாராமன்  மற்றும்  எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் தங்கள் வாழ்வில் அடைந்துள்ள மேன்மையை பாராட்டும் விதமாக ஜேஎன்யூவின் உயரிய விருதான "புகழ்பெற்ற முன்னாள் மாணவர்"  என்கிற விருதை வழங்குவதென ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து, பதிவாளர் பிரமோத் குமார் வெளியிட்ட  அறிக்கையில் : ஜேஎன் யூவின் முன்னாள் மாணவர்களான மத்திய அமைச்சர்கள்  நிர்மலா சீதாராம் மற்றும்  எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் மற்ற மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு, தாங்கள் அடைந்துள்ள பெரும் பதவிகளின் மூலம் உத்வேகம் ஊட்டக்கூடியவர்களாவும் முன் உதாரணமாகவும்  திகழ்ந்து வருகிறார்கள் என்றால் அது மிகையாக இருக்காது.

எனவே  இவர்கள் அடைந்துள்ள பெருமைகளை கௌரவப்படுத்தும் விதமாக, வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஜேஎன் யூவின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில்  பல்கலைக்கழகத்தின் உயரிய விருதான "மேன்மை மிகு மாணவர்" என்கிற விருது வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மேன்மை மிகு மாணவர் என்ற விருது முதன் முறையாக இவர்கள் இருவருக்குத்தான் தங்கள் பல்கலைகழகம் சார்பாக வழங்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close