ஏ.என்.32 போர் விமானத்தில் பயணித்த 13 பேரும் பலி! - மீட்புக்குழு தகவல்

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 01:17 pm
no-survivors-found-at-the-site-in-arunachal-pradesh-where-iaf-an-32-crashed-confirms-indian-air-force

கடந்த வாரம் காணாமல் போன, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் கடந்த ஜூன் 3ம் தேதி பகல் 12.25 மணிக்கு அசாம் மாநிலம், ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டது. மிகவும் சிறிய அளவிலான இந்த விமானத்தில் 5 பயணிகள் உள்பட 13 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மென்சுகா என்ற பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 

தொடர்ந்து, விமானத்தின் பாகங்கள் உடைந்த நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சியாங் கட்டி என்ற கிராமத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று மீட்புக்குழு அவ்விடத்திற்கு சென்றடைந்தது. அங்கு யாரும் உயிரோடு இருப்பதற்கான சாத்தியமில்லை என்றும் விமானத்தில் பயணித்த 13 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close