கிர்கிஸ்தானை சென்றடைந்தார் பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 03:32 pm
pm-modi-reached-kyrkyzstan-for-sco-summit

ஷாங்காய் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்று கிர்கிஸ்தானை அடைந்துள்ளார். 

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு 2 நாட்களாக (ஜூன் 13 & 14)  நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கிர்கிஸ்தான் புறப்பட்டுச் சென்றார். ஓமன், ஈரான் வழியாக கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கேக் நகரை இன்று பிற்பகல் 3 மணிக்கு அவர் சென்றடைந்தார். அவருக்கு கிர்கிஸ்தான் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

மாநாட்டில் கலந்துகொள்வதோடு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜிங்பிங் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசுகிறார்.  மேலும், கிர்கிஸ்தான் அதிபர் சூரான்பே ஜீன்பெகோவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close