சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி; அரசு வேலை! - உ.பி முதல்வர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 04:16 pm
up-cm-adityanath-announces-rs-25-lakh-govt-job-to-kin-of-two-crpf-personnel

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக்கில் தீவிரவாதிகளுடன் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடில் உயிரிழந்த உ.பியைச் சேர்ந்த இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் நேற்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வீர மரணமடைந்த இருவருமே உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 

இதையடுத்து, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நிதியுவி அறிவித்துள்ளார். அதன்படி, இருவரின் குடுமபத்தினருக்கும் தலா ரூ. 25 லட்சம் உதவித்தொகையுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close