ஏ.என்.32 ரக விமானம் விபத்து; 13 பேரின் உடல்கள் கண்டெடுப்பு!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 04:58 pm
indian-air-force-s-rescue-team-recovers-bodies-of-all-personnel-aboard-an-32-aircraft

காணாமல் போன ஏ.என்.32 ரக போர் விமானத்தின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதில் பயணித்த 13 பேரின் உடல்களும் உயிரிழந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளன. 

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேசம் மென்சுகா என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அதன்படி, விமானத்தின் பாகங்கள் உடைந்த நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சியாங் கட்டி என்ற கிராமத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று மீட்புக்குழு அவ்விடத்திற்கு சென்று விமானத்தில் பயணித்த 13 பேரின் உடல்களும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் 13 பேரும் விமான விபத்தில் உயிரிழந்ததாக விமானப்படையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இது தவிர அவ்விடத்தில் விமானத்தின் கறுப்புப்பெட்டியும் மீட்புக்குழுவால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

newstm.in

ஏ.என்.32 போர் விமானத்தில் பயணித்த 13 பேரும் பலி! - மீட்புக்குழு தகவல்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close