அதிபர் விருந்து : நரேந்திர மோடி, இம்ரான் கான் பங்கேற்பு

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 07:42 pm
dinner-provided-by-kyrgyzstan-president-modi-and-imran-khan-participated

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் பிஸ்கெக்கில் சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து, இருதரப்பு நட்புறவு குறித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து, கிர்கிஸ்தான் அதிபர் அளித்த இரவு விருந்தில் (டின்னர்) பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த விருந்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்றார்.

கடந்த பிப்ரவரி 14 -ஆம் தேதி, புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடன் இனி அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இல்லையென இந்தியா திட்டவட்டமாக அறிவித்தது. இந்த நிலையில், இருநாட்டு பிரதமர்களும் விருந்து நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close