இந்தியா  - சீனா - ரஷியா முத்தரப்பு பேச்சுவார்த்தை : மத்திய அரசு தகவல்

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 09:32 pm
india-russia-china-trilateral-meeting

ஜி -20 நாடுகளின் உச்சி மாநாடு, ஜப்பானின் ஒசாகா நகரில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. அப்போது, இந்தியா -சீனா -ரஷியா நாடுகளுக்கு இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே இன்று தெரிவித்தார்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது, விஜய் கோகலே முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்த தகவலை தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close