ஏ.என். 32 ரக விமான பயணிகளில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர்!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 01:27 pm
kovai-man-is-including-13-dead-in-an-32-flight-accident

அருணாச்சலப் பிரதேசம் அருகே விபத்தில் சிக்கிய ஏ.என். 32 ரக விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர என்று தெரிய வந்துள்ளது. அவரது உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேசம் மென்சுகா என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அதன்படி, விமானத்தின் பாகங்கள் உடைந்த நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சியாங் கட்டி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று மீட்புக்குழு அவ்விடத்திற்கு நேரில் சென்று விமானத்தில் பயணித்த 13 பேரின் உடல்களையும் உயிரிழந்த நிலையில் மீட்டெடுத்தனர். அவர்கள் 13 பேரும் விமான விபத்தில் உயிரிழந்ததாக விமானப்படையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்த விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்தவர்களில் கோவையை சேர்ந்தவரும் ஒருவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவரது உடல் இன்று கோவை கொண்டு வரப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

ஏ.என்.32 போர் விமானத்தில் பயணித்த 13 பேரும் பலி! - மீட்புக்குழு தகவல்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close