பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... மருத்துவர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 05:03 pm
on-the-17th-of-the-day-the-doctors-strike-across-the-country

கொல்கத்தாவில் அரசு மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, வரும் 17 -ஆம் தேதி நாடு முழுவதும் அனைத்து தரப்பு மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக இந்திய மருத்துவர் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்த சங்கத்தினர் தெரிவிக்கையில், "கொல்கத்தாவில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து, இந்திய மருத்துவர் சங்கம் சார்பில், வரும் 17- ஆம் தேதி (திங்கள்கிழமை) நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். அரசு, தனியார் மருத்துவர்கள் என அனைத்து தரப்பு மருத்துவர்களும் அன்று  நாள் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அன்று சீனியர், ஜூனியர் டாக்டர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பணியில் ஈடுபடமாட்டார்கள், அவசர சிகிச்சை பிரிவை தவிர மற்ற பிரிவுகளில் மருத்துவர்கள் பணியாற்றமாட்டார்கள்’ என்றனர்.

மேலும், வரும் 15 மற்றும் 16- ஆம் தேதிகளில் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றவும், தர்ணா, அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்,  இப்போராட்டங்கள் நடைபெறும் தேதிகளில் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்து இயங்கும் என்றும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close