டிவி சேனல்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 05:54 pm
i-b-minister-prakash-javadekar-issuing-order-to-tv-channels-that-whatever-serials-they-broadcast

டைட்டில் கார்டில் நாடகங்களுக்கான தலைப்பை போடுவது தொடர்பாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு டிவி சேனல்களுக்கும், மத்திய  தகவல் - ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், "தொலைக்காட்சி சேனல்கள் நாடகங்களை ஒளிபரப்பும்போது, நாடகத்தின் தொடக்கத்திலோ, முடிவிலோ அதன் தலைப்பை பல சமயங்களில் ஆங்கிலத்தில் மட்டும்தான் டைட்டில் கார்டில் போடுகின்றன. ஆனால் இனிமேல், நாடகங்களுக்கான தலைப்பை ஆங்கில மொழியில் மட்டுமின்றி, ஏதாவதொரு இந்திய மொழியிலும் தெரிவிக்க வேண்டும். இந்திய மொழிகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . பல்வேறு மொழி சினிமாக்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது" என பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close