பிரதமர் - முதல்வர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2019 11:48 am
cm-edappadi-palanisamy-meets-pm-modi-at-delhi

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மாேடியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார். அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ளது. இந்த புதிய அரசு பதவி ஏற்ற பிறகு, முதல் முறையாக நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு விமானம் மூலமாக டெல்லி சென்றார் . அவருடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் சிலர், எம்.பிக்கள் மற்றும் சில அதிகாரிகளும் சென்றுள்ளனர். 

இதையடுத்து இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். தமிழக பிரச்னைகள், தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகள் குறித்து அவர் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்ந்து, முதல்வர் பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சில அமைச்சர்களை இன்று இரவு சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close