மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மீண்டும் உரையாட உள்ள பிரதமர் மோடி

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Jun, 2019 06:16 pm
pm-s-mann-ki-baat-to-resume-on-30-june

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வருகிற 30ம் தேதி முதல் மீண்டும் மக்களோடு தான் உரையாட இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மன் கி பாத் நிகழ்ச்சி கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்ற நிலையில், வரும் 30-ம் தேதி காலை 11 மணிக்கு, தான் மீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசவிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

130 கோடி இந்தியர்களின் ஒட்டுமொத்த பலத்தைக் கொண்டாடி மகிழ்ச்சியையும், நேர்மறை சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி கோரியுள்ளார்.

அத்துடன், மக்கள் தன்னிடம் நிறைய சொல்ல வேண்டியிருப்பதால் நமோ ஆப் மூலம் திறந்தவெளி கருத்துப் பதிவு களத்தைப் பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close