18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்!

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2019 06:59 pm
yogaday-2019-indo-tibetan-border-police-soldiers-perform-yoga-at-18-000-feet-in-ladakh

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தோ - திபெத்திய போலீசார் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி லடாக்கில் உள்ள பனிமலையில் இந்தோ -  திபெத்திய போலீசார் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. 

பனி மிகவும் அதிகமாக இருக்கும் சூழ்நிலையிலும் அதற்கேற்ப உடைகள் அணிந்துகொண்டு வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளது மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. 

மிக உயரமான இடத்தில் வீரர்கள் யோகா செய்யும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close