போராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2019 09:53 pm
protest-mamata-calls-to-doctors

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து அம்மாநிலத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால்  நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வருமாறு மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தாக்கப்பட்ட மருத்துவரின் மருத்துவ செலவுகளை மாநில அரசு ஏற்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், மருத்துவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேற்கு வங்கத்தில் மருத்துவசேவை இயல்புநிலைக்கு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close