மிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் இளம்பெண் தேர்வு

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Jun, 2019 11:04 am
miss-india-2019-winner-is-suman-rao-from-rajasthan

ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் சுமன் ராவ் ஃபெமினா மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பீகாரைச் சேர்ந்த ஷ்ரேயா சங்கர் மிஸ் இந்தியா யுனைடெட் என்றும் சட்டிஸ்கரை சேர்ந்த ஷிவானி ஜாதவ், மிஸ் கிராண்ட் இந்தியா என்றும் பட்டங்களைப் பெற்றுள்ளனர். 

தெலுங்கானாவைச் சேர்ந்த சஞ்சனா விஜ் என்ற அழகி மிஸ் இந்தியா ரன்னர் அப் ஆக தேர்வு பெற்றுள்ளார். ஆண்டுதோறும் உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு நாடும் தனது அழகியைத் தேர்வு செய்து வருகிறது.

பல்வேறு சுற்றுகளை அடுத்து மும்பையின் சர்தார் வல்லபபாய் பட்டேல் உள்ளரங்கில் நடைபெற்ற வன்ணமயமான இறுதிச் சுற்றில் மிஸ் இந்தியாவாக இந்த ஆண்டு சுமன் ராவ் வெற்றி வாகை சூடினார்.

இந்தியா அழகியாக தேர்வாகி உள்ள சுமன் ராவ் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close