மீண்டும் குஜராத்தை நோக்கி வரும் 'வாயு புயல்'

  அனிதா   | Last Modified : 16 Jun, 2019 01:38 pm
cyclone-vayu-coming-back-to-gujarat

குஜராத் கடற்கரைப் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வாயு புயல் தற்போது திசை மாறி மீண்டும் குஜராத்தை நோக்கி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவான வாயு புயல் கடந்த 13ஆம் தேதி குஜராத் கடற்கரை பகுதியையொட்டி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துவாரகாவில் இருந்து 415 கி.மீ தென்மேற்கு திசையிலும், போர் பந்தரில் இருந்து 440 கி.மீ தென் மேற்கு திசையிலும் நிலைகொண்ட புயல் தற்போது, அதிதீவிர புயலாக 8 கிமீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்கிறது. 

தொடர்ந்து, இந்த புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, நாளை (17ஆம் தேதி) இரவு வடக்கு குஜராத்தில் கரையை கடக்க கூடும் என இந்தியவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிதீவிர புயலாக உள்ள வாயு புயல், கடலிலேயே தீவிர புயலாக மாறி, பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த கரையை கடப்பதால் பாதிப்பு அதிக அளவில் இருக்காது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close