அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2019 03:56 pm
all-party-meeting-today

டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை(ஜூன் 16) தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சியின் சார்பில் குலாம்நபி ஆசாத் மற்றும் இதர கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்று பிற்பகல் கூட்டம் முடிவடைந்ததையடுத்து கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி. கூட்டத்தில் உங்களது வலிமைமிக்க கருத்துக்களை கூறியதற்கும் நன்றி. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து கட்சியினரும் ஒன்றாக செயல்பட்டு இந்த கூட்டத்தொடரை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close