'ஒரே நாடு; ஒரே தேர்தல்' - பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2019 04:14 pm
narendra-modi-calls-meeting-of-presidents-of-all-parties-on-19-june-to-discuss-one-nation-one-election

வருகிற 19ம் தேதி 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற திட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களை ஒன்றாக நடத்தும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற நடைமுறையை கொண்டு வருவது குறித்து வருகிற ஜூன் 19-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close