அயோத்தியில் ராமர் கோவில் : அவசர சட்டம் கொண்டு வர சிவசேனா வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2019 04:47 pm
modi-has-courage-should-bring-ordinance-to-construct-ram-temple-uddhav-thackeray-in-ayodhya

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ளது. மேலும், பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.பிக்களுடன் இன்று அயோத்தி சென்றார். அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட பந்தலில் ராமர் சிலைக்கு மாலை அணிவித்து அவர்கள் தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி மிகவும் துணிச்சல் மிக்கவர். அவரால் மட்டுமே அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசு விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்" என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close