ஏஎன் 32 விமான கறுப்பு பெட்டி சேதம்- விபத்துக்கான காரணம் தெரிய தாமதமாகும்

  ஸ்ரீதர்   | Last Modified : 17 Jun, 2019 06:18 pm
blackbox-of-crashed-an-32-damaged-data-retrieval-for-accident-probe-may-get-delayed

விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படையின் விமானத்தின் கறுப்பு பெட்டி சேதமடைந்துள்ளதால் விபத்து நேரிட்டது குறித்து தகவல் தெரிய தாமதமாகும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்- 32 ரக போர் விமானம் கடந்த 3ம் தேதி அன்று அசாம் மாநிலம் ஜோர்காட் பகுதியிலிருந்து விமான சிப்பந்திகள் உள்பட 13 உடன் அருணாச்சல பிரதேசம் மெச்சுகா நோக்கி பறந்து சென்ற போது மாயமானது.

இதையடுத்து விமானப்படை காணாமல் போன விமானத்தை தேடி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன விமானம் அருணாச்சல பிரதேசம் லிபோ என்ற இடத்தில் 12 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது விபத்தில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த 13 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த கறுப்பு பெட்டி மீட்கப்பட்டு விமானபடை தளத்திற்கு சோதனைக்காக கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் கறுப்பு பெட்டியில் சேதம் ஏற்பட்டிருப்பதால் அதிலுள்ள தகவல்களை பெறுவதில் விமான படையின் தொழில்நுட்ப பிரிவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தின் கறுப்பு பெட்டியில் பதிந்துள்ள தகவல்களை வெளியில் எடுப்பதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட எச்ஏஎல் நிறுவனத்திற்கு அனுப்பபட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close