பாஜக எம்.பி., ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்வாக வாய்ப்பு

  அனிதா   | Last Modified : 18 Jun, 2019 09:58 am
bjp-mp-om-birla-expectation-to-be-elected-speaker-of-lok-sabha

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இதை தொடர்ந்து 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் எம்.பியாக பதவியேற்றுக்கொண்டனர். 

இந்நிலையில், நாளை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதி எம்.பியான ஓம் பிர்லா போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் சபாநாயகராக ஓம் பிர்லாவை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருக்காது என தெரிகிறது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close