ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வீரமரணமடைந்த காவல்துறை ஆணையரின் இறுதி ஊர்வலத்தின் போது துக்கம் தாங்காமல் உயரதிகாரி ஒருவர் அழுத காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமையன்று சிஆர்பிஎப் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் ஆய்வாளர் அர்ஷத் கான் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமையன்று அர்ஷத் கான் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ஹாசிப் முகல் கலந்து கொண்டார்.
அப்போது உயிரிழந்த அர்ஷத் கானின் 4 வயது மகனை தூக்கி வைத்திருந்த அசிப் முகல் துக்கம் தாங்க முடியாமல், குழந்தையைக் கண்டு கதறி அழுதார். துக்க வீட்டிற்கு வந்திருந்த அனைவரும் இதைக் கண்டு வருத்தம் தாளமல் கண்கலங்கி அழுதாவாறு இருந்தனர். இந்த காட்சிகள் வீடியோவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
newstm.in