புல்வாமா தாக்குதலுக்கு உதவிய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2019 01:04 pm
sajjad-bhat-owner-of-car-used-in-feb-14-pulwama-attack-killed-in-gunfight

புல்வாமா தாக்குதலுக்கு தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட காருக்கு சொந்தக்காரரான ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி இன்று அனந்த்நாக் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தான் காரணம் என்ன தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்திய விமானப்படையும் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது. 

இந்த சூழ்நிலையில், புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காருக்கு சொந்தக்காரரான ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி இன்று அனந்த்நாக் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது பெயர் ஹஃபிஸ் சஜாத் பத் (Hafiz Sajjad Bhat) என தெரிய வந்துள்ளது. 

புல்வாமா தாக்குதலில் இவரது Maruti Eeco என்ற வாகனம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று அனந்த்நாக் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close