மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு!

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2019 11:27 am
om-birla-selected-as-speaker-of-ls

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து 17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முன்தினம்(ஜூன் 17) தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தொடரில் கடந்த இரு தினங்கள், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.பிக்களாக பதவியேற்றுக்கொண்டனர். இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

இதையடுத்து, இன்று புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.பியான ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஏற்கனவே பிஜு ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றின. இதைத்தொடர்ந்து இன்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு நடந்தது. அதன்படி, ஓம் பிர்லாவின் பெயரை பிரதமர் மோடி முன்மொழிந்தார். தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரது பெயரை வழிமொழிந்தார். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஓம் பிர்லாவின் பெயரை முன்மொழிந்தனர். இதையடுத்து, மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close