மக்களவையில் மரபை மீறாத காங்கிரஸ்!

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2019 01:07 pm
is-congress-violating-the-tradition-in-ls

வழக்கமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்து, பெரும்பாலும் ஆளும் கட்சி தரப்பைச் சார்ந்த ஒருவரே சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார். சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஆளும் கட்சி சார்பில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மூத்த தலைவர் ஒருவர் சேர்ந்து தான் சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைக்க வேண்டும். இது வழக்கமாக இருந்து வரும் ஒரு மரபு. 

அதன்படி, 17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முன்தினம்(ஜூன் 17) தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்கள், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், ஒவ்வொருவராக மக்களவையின் உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டனர். இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் அவர்களுக்கு பதவிப்பிராமணம் செய்து வைத்தார். 

அதைத் தொடர்ந்து, இன்று சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, பிரதமர் மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களரே சபாநாயகரை அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.

எதிர்க்கட்சிகளின் தரப்பில் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியாக 52 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக காங்கிரஸ் தற்போதைய அவையில் உள்ளது. இந்நிலையில் புதிய சபாநாயகைரை தேர்ந்தெடுத்த பின்னர், அவரை பிரதமருடன் இணைந்து அழைத்துச் சென்று அமர வைக்கும் நிகழ்வில் காங்கிரஸ் தரப்பிலிருந்து ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கலந்து கொண்டார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆதிர் ரஞ்சன் சௌத்ரி  தவிர எதிர்க்கட்சிகளின் சார்பில் திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர். பாலு பிரதமருடன் சேர்ந்து சென்று புதிய சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைத்தார். காங்கிரஸ் சார்பில் ராகுல் அல்லது சோனியா உட்பட வேறு எந்த மூத்த உறுப்பினரும் பிரதமருடன் சேர்ந்து சென்று புதிய சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close