அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் எதிர்கட்சித் தலைவர்கள்?

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2019 03:33 pm
arvind-kejriwal-mayawati-mamata-banerjee-to-skip-all-party-meet-left-to-attend

கெஜ்ரிவால், மம்தா, மாயாவதி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் இன்று மாலை டெல்லியில் நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளதன. 

மக்களவைத் தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களை ஒன்றாக நடத்தும் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற புதிய தேர்தல் நடைமுறை குறித்து விவாதிக்கும் பொருட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை டெல்லியில்  அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சியின் தலைவர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னரே வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ்வாதியின் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் கலந்துக்கொள்கின்றனர். இவர்கள் தவிர பாஜக மற்றும் கூட்ட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close