விமானிகள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர தடை.. ஏர் - இந்தியாவின் அடடே முடிவு!

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Jun, 2019 05:08 pm
ai-likely-to-ban-pilots-from-bringing-food-on-aircraft

ஏர் - இந்தியா விமான நிறுவனத்தின் விமானிகள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை காலை 11:40 மணிக்கு, பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு, ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது விமானி, தான் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வருமாறு விமான சிப்பந்தியிடம் கூறியுள்ளார். அதற்கு விமான சிப்பந்தி மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விமானம் 2 மணி நேரமாக புறப்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த கண்காணிப்பு அதிகாரிகள் உடனடியாக அந்த விமானியையும், சிப்பந்தியையும் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டு வேறு விமானி மூலம் விமானத்தை புறப்பட செய்துள்ளனர்.

மேலும் இருவரும் தற்காலிமாக பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஏர் - இந்தியா விமானிகள் யாரும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வரக்கூடாது என்று அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close