பிரதமர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்ததா அதிமுக?

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2019 05:29 pm
admk-is-not-participated-in-all-party-meeting-which-is-held-in-delhi-today

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வரும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களை ஒன்றாக நடத்தும் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற புதிய தேர்தல் நடைமுறை குறித்து விவாதிக்கும் பொருட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை டெல்லியில்  அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னரே வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ்வாதியின் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். 

மேலும், மக்களவைத் தேர்தலில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் யாரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற நிலையில், முதல்வருக்கு பதிலாக வேறு பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாமா? என்ற கடைசி நேரத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அதிமுக தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதே நேரத்தில், ஒடிஸா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி உள்ளிட்டோரும், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close