மக்களவையில் இன்று முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2019 11:34 am
triple-talaq-bill-submitted-in-ls

நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முதலாவதாக முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, கடந்த ஜூன் 17ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கூட்டத்தொடரில் முதலாவதாக 'முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா' இன்று அவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்கிறார். 

அதேபோன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் செல்ல தடை விதிக்கும் தனிநபர் மசோதாவும் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கேரள எம்பி பிரேமச்சந்திரன் இந்த மசோதாவை தாக்கல் செய்கிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close