மக்களவையில் முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா தாக்கல்; எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்!

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2019 12:53 pm
triple-talaq-bill-is-passed-in-lok-sabha

நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எதிரிக்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே முதலாவதாக முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, கடந்த ஜூன் 17ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய எம்.பிக்கள் பதவியேற்பு நிகழ்வுக்கு பின்னர் இன்று முதல், மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில் கூட்டத்தொடரில் முதலாவதாக 'முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா' இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். 

தொடர்ந்து மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசி வருகிறார்கள். காங்கிரஸ் எம்.பி சசி தரூர், அசாரூதீன் ஒவைசி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர். இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close