ராகுலை கழுவி கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்... என்ன காரணம் தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2019 09:57 pm
rahul-gandhi-s-distasteful-tweet-taking-a-sarcastic-jibe-in-social-media

யோகா பயிற்சி மேற்கொண்ட பாதுகாப்புப் படை வீரர்களை கேவலமாக சித்தரித்து, தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இந்திய ராணுவத்தின் மோப்ப நாய் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்களும் யோகா பயிற்சியை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், பணி நிமித்தம் தங்களுடனே இருக்கும் மோப்ப நாய்களை அருகில் வைத்து கொண்டிருந்தனர். இந்தக் காட்சியை மையப்படுத்தி, பாதுகாப்புப் படை வீரர்களை கேவலமாக சித்தரித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

"புதிய இந்தியா" என்ற கேப்ஷனுடன் வெளியிடப்பட்ட இப்பதிவுக்கு, நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்துள்ள நிலையில், நெட்டிசன்கள் ராகுலை பலவாறு திட்டி தீர்த்து வருகின்றனர். அதில் சில சாம்பிள்கள் இதோ உங்களுக்காக:

தவறுகளிலிருந்து நீங்கள் பாடம் கற்கவேமாட்டீர்களா? இப்படியே பேசிக்கிட்டிருந்தா 2024 - தேர்தலிலும் உங்களுக்கு ஆப்பு தான்.

சற்றும் அறிவில்லாமல், நம் ராணுவத்தின் மோப்ப நாய் படைப் பிரிவை நீங்கள் கொச்சைப்படுத்தியுள்ளீர்கள். காங்கிரஸ் ஏன் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறவில்லை என்பது இப்போது புரிகிறது.

— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2019

கொஞ்சமாவது முதிர்ச்சியடைய வேண்டும் என்ற எண்ணம் உண்மையில் உங்களுக்கு இருக்கா? இல்லையா?

நல்ல படம்... ஆனால் ரசிக்கும்படியாக இல்லை... என இப்படி பலவாறு, நெட்டிசன்கள் ராகுலை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close