திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய தலைவர்! - ஜெகன் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2019 01:15 pm
jagan-appoints-uncle-subba-reddy-chairman-of-tirumala-tirupati-devasthanam

ஆந்திர மாநிலத்தின் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக சுப்பா ரெட்டியை நியமித்து அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில்,  அமோக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மாநில முதல்வராக பதவியேற்றுள்ளார். அவரது பதவியேற்பு விழாவே விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் மக்கள் புடைசூழ மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

பதவியேற்ற முதல் நாளில் இருந்தே மக்களுக்காக பல்வேறுஅதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ஊதிய  உயர்வு, மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வர ஏற்பாடு, காவலர்களுக்கு வார விடுமுறை, ஊழல் செய்தால் பதவி நீக்கம், விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் என அதிரடி திட்டங்களை அறிவித்து மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். 

தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தின் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக சுப்பா ரெட்டியை நியமித்து ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஆவார். 

இந்தியாவிலே திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தான் அதிக வருவாய் வருவதும், மேலும் தேவஸ்தான தலைவர் பதவி அம்மாநிலத்தில் மிக உயரிய பதவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close