அப்படி வாங்க வழிக்கு...மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த துடிக்கும் பிரிவினைவாதிகள்!

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2019 08:19 pm
j-k-guv-satya-pal-malik-separatists-ready-for-talks-with-center

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத அமைப்புகள், மத்திய அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்திருப்பதாக, அந்த மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், மாநில தலைநகரான ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேலும் பேசியது:
பிரிவினைவாதிகளுக்கு அண்டை நாட்டிலிருந்து சட்டவிரோதமாக பணம் வந்து கொண்டிருந்ததை தடுத்தது,  இங்குள்ள பிரிவினைவாதிகளுக்கு ஏஜென்ட்டுகளாக செயல்பட்டவர்களை கண்டறிந்து கைது செய்தது போன்ற மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளின்  மூலம், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் கல்லெறியும் சம்பவங்கள் அனேகமாக முடிவுக்கு வந்துவிட்டன.

ஹூரியத் மாநாட்டு அமைப்பு உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் தற்போது மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளனர்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள், ஜம்மு -காஷ்மீர் மாநிலமே ஒரு சொர்க்கம் என்பதையும், பயங்கரவாதத்தை தூண்டும் எண்ணம் இல்லாதவர்களுடன் இணைந்து வாழ்வது மற்றொரு சொர்க்கம் என்பதையும் உணர வேண்டும். 

பயங்கரவாத எண்ணத்துடன் எல்லை தாண்டி தாக்குதல் நடத்துபவர்களுக்கு துப்பாக்கி குண்டுகளால் தான் பதிலடி தர முடியும் என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close