ராகுல் காந்திக்கு அமேதி மக்கள் சிறப்பான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர்: ஸ்மிரிதி இரானி

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2019 11:03 am
smiriti-visited-amethi

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமேதி மக்கள் சிறப்பான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர் என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ்-இன் தொகுதியாக இருந்து வந்த அமேதி தொகுதியில் முதல் முறையாக பாஜகவின் ஸ்மிரிதி ராணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். 

இந்நிலையில், அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று அமேதிக்கு சென்று, தனது தொகுதி மக்களை சந்தித்து பேசினார். அவருடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்-ம் உடன் சென்றார்.

தொடர்ந்து, பாரோலியா கிராமத்தில் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயி பிரதான் சுரேந்திரசிங் என்பவரது வீட்டுக்குச் சென்றார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் பேசிய ஸ்மிரிதி இரானி, "அமேதி தொகுதியில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்து மக்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்காக யார் நினைக்கிறார்களோ, அவர்களை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். உண்மையிலேயே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமேதி மக்கள் சிறப்பான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண். அப்படிப்பட்ட ஒரு பெண், மிகப் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த, அதுவும் ஒரு கட்சியின் தலைவரை தோற்கடிப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், மக்கள் சரியாக புரிந்து கொண்டு, யார் மக்களுக்காக உழைக்கிறார்கள் என தெரிந்துகொண்டு வாக்களித்துள்ளனர். இது ஒரு புரட்சி என்றே நான் கூறுவேன். அமேதி தொகுதி மக்களுக்கு தொடர்ந்து எனது சேவையை ஆற்றுவேன்" என்று கூறினார். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close