தமிழகத்தால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு: முதல்வர் குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2019 09:59 pm
drinking-water-shortage-in-karnataka-by-tamil-nadu-cm-kumarasamy

தமிழகத்திற்கு 9 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட்டதால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மற்றும் ஹேமாவதி அணைகளை திறக்கக்கோரி மாண்டியாவில் விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டம் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவால் கர்நாடகாவில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. தமிழகத்திற்கு 9 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட்டதால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’ என்று  முதல்வர் குமாரசாமி பதிலளித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close