அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இன்று இந்தியா வருகிறார்!

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 02:39 pm
us-secretary-of-state-mike-pompeo-to-arrive-in-india-today

அமெரிக்காவின் பல்வேறு எச்சரிக்கைகளை மீறி, இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வரும் சூழ்நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று டெல்லி வரவுள்ளார். 

அவர் பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பிரச்னைகள் குறித்து பேசவிருக்கிறார். 

மேலும், வரும் ஜூன் 28 மற்றும் 29ம் தேதி ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் இடையே பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ம் சந்தித்து பேசவிருக்கின்றனர். இதுகுறித்த முன்னேற்பாடுகள் குறித்து பேச, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், இன்று இந்தியா வருவதாக கூறப்படுகிறது. 

பல்வேறு காரணங்களால்  'முன்னுரிமை வர்த்தக நாடு' எனும் அந்தஸ்தில் இருந்து 30 நாடுகளை அமெரிக்கா நீக்கியது. அதில் இந்தியாவும் ஒன்று. இதனால் சாதாரண மக்கள் பயன்படுத்தும் 800க்கும் மேற்பட்ட பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது நிறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதற்கான காலக்கெடுவும் விதிக்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வந்தது. 

இந்த சூழ்நிலையில், சோஷலிசத்தை பின்பற்றியதன் காரணமாக வெனிசுலா நாட்டின் வர்த்தகம் அதலபாதாளத்தில் சென்றது.  இத்தகைய இக்கட்டான சூழலில் தான் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முன்வந்தது. அதுவும், டாலர் மதிப்பில் அல்லாமல், இந்திய நாணயத்தின் மதிப்பில் கணக்கிட்டு அதனை பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்தது. கச்சா எண்ணெய்க்கு பதிலாக, வெனிசுலா நாட்டிற்கு தேவையான பால் மற்றும் உணவுப்பொருட்கள் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டன. 

மேலும், ரஷ்யாவிடம் இருந்து எஸ்.400 என்ற ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதற்கும் அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த எதிர்ப்பை மீறி இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான், இம்மாத இறுதியில், ஜி-20 மாநாட்டின் இடையே நடைபெறவுள்ள மோடி - டிரம்ப் சந்திப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்ய, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று டெல்லிக்கு வரவுள்ளார் என்று கருதப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close