ஜார்க்கண்ட்: பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து; 6 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 01:07 pm
6-killed-43-injured-as-bus-falls-into-gorge-in-jharkhand

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 39 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கர்வ நகரத்துக்கு அருகே சென்ற போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதுடன் அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close