ஆம் ஆத்மி எம்.எல்.ஏவுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை!

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 03:54 pm
a-speical-mp-mla-fast-track-court-awarded-a-3-month-jail-sentence-to-aap-mla

தேர்தல் பணியில் இடையூறு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஒருவருக்கு 3 மாத சிறைத்தண்டனை அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2013ம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் கிழக்கு டெல்லி கல்யாண் புரி என்ற இடத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மனோஜ் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், ஏ.ஏ.பி. கட்சி.. எம்.எல்.ஏவிற்கு 3 மாதம் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும், ரூ.10,000 அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட எம்.எல்.ஏ கொண்ட்லி தொகுதி எம்.எல்.ஏ வாக பதவி வகித்து வருகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close