தங்களைவிட தேசமே பெரிதென கருதுபவர்கள் இந்திய மக்கள் : பிரதமர் பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 05:59 pm
pm-modi-speech-in-parliament

தங்களைவிட இந்த தேசமும், தேசத்தின் வளர்ச்சியும் தான் பெரிதென கருதுபவர்கள் நம் நாட்டு மக்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து, நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

நீண்ட நாளைக்கு பிறகு, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை நாட்டு மக்கள் பாஜகவுக்கு தந்துள்ளனர். பாஜக தலைமையிலான முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பொதுமக்கள் அளித்துள்ள நற்சான்றிதழே இத்தேர்தல் முடிவு.

அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடம் ஏற்பட்டிருந்த விழிப்புணர்வு விலைமதிப்பற்றது. அனைத்து காரணிகளையும் ஆராய்ந்து தான் அவர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.

 தேர்தலில் யார் வென்றார்கள்? யார் தோற்றார்கள்? என்பது முக்கியமல்ல. அனைவரும் இணைந்து நவீன இந்தியாவை கட்டமைப்பதே இனி நம் நோக்கமாக இருக்க வேண்டும்.

வலிமையான ,பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்ற தேசத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இணைந்து செயல்பட, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இத்தருணத்தில் அழைப்பு விடுக்கிறேன். 

எதிர்கால இந்தியா எப்படியெல்லாம் மிளர போகிறது என்பதற்கான முன்னோட்டமாக குடியரசுத் தலைவரின் உரை அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close