மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 06:30 pm
rajya-sabha-election-date-announced

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல்  ஜூலை 18-ஆம் தேதில் நடைபெறும் என்று இந்திய தேர்தல ஆணையம் இன்று அறிவித்துள்ளது. 

மேலும், ‘ஜூலை 1-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கும். ஜூலை 8-ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். போட்டி இருந்தால் ஜூலை 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் நடைபெறும் நாள் அன்று மாலை 5 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும்’ என்றும் இந்திய தேர்தல ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக தலா 3 எம்பிக்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. ஒரு மா நிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 

அதிமுக எம்பிக்கள் 4 பேர், இந்திய கம்யூனிஸ்ட் எம்பி டி.ராஜா ஆகியோர் பதவிக்காலம் முடிவடைகிறது. கனிமொழி மக்களவை எம்பியாகிவிட்டதால் அவரது மாநிலங்களவை எம்பி பதவி ஏற்கனவே காலியாக உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close