226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2019 03:53 pm
pm-modi-there-are-226-districts-in-the-country-where-there-is-water-crisis

நாட்டின் பல்வேறு பகுதிகளில், மொத்தம் 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை நிலவி வருவதாகவும், இந்தப்  பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதெனவும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களில் இன்று உரையாற்றினார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியதாவது:

பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 226 மாவட்டங்களில் தற்போது தண்ணீர் பிரச்னை நிலவி வருகிறது. தலையாய இப்பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக,  நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஒதுக்கப்படும் தொகையை, தண்ணீர் பிரச்னையை தீர்க்க முன்னுரிமை அளித்து பயன்படுத்தும்படி, எம்.பி.க்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தண்ணீரின் முக்கியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய அரசு ஆவன செய்து வருகிறது.

பிகாரில் மூளைக்காய்ச்சலால் நிகழ்ந்துள்ள மரணங்கள் துரதிருஷ்டவசமானவை. இந்த விஷயத்தை மத்திய அரசு மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த துயரத்திலிருந்து மக்களை மீட்க, பிகார் மாநில அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து இணைந்து செயலாற்றி வருகிறது.

எந்தவொரு காரணத்துக்காகவும் மனிதர்கள் தாக்கப்படுவதை நான் வெறுக்கிறேன். சக மனிதனை தாக்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close