நாடு முழுவதும் 7 லட்சம் காலிப் பணியிடங்கள்: மத்திய அமைச்சர் தகவல்!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2019 11:39 am
nearly-7-lakh-government-posts-lying-vacant-under-modi-government-2

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சுமார் 7 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். 

அதில், "மார்ச் 1, 2018 நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 38.02 லட்சம் பணியிடங்களில் 31.18 லட்சம் பணியிடங்களே நிரப்பப்பட்டுள்ளன. மீதியுள்ள 6.84 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. எஸ்.எஸ்.சி மற்றும் ரயில்வே வரும் ஆண்டுகளில் இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன" என்று பதில் அளித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close