ஹரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2019 12:12 pm
haryana-congress-spokesperson-shot-dead-in-faridabad

ஹரியானாவில் மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டதில், காரில் சென்ற அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் விகாஸ் சவுத்ரி உயிரிழந்தார். 

ஹரியானா மாநிலம் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் சவுத்ரி இன்று காலை  ஃபரிதாபாத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது டெல்லிக்கு அருகே ஒரு இடத்தில் கார் நின்ற போது, அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், விகாஸ் சவுத்ரியை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். 

இதையடுத்து, அங்கிருந்த காவலர்கள்  விகாஸ் சவுத்ரியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடம்பில் 10க்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தொடர்ந்து, அவரது உடல் தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டெல்லி போலீசார் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close